[email protected] +91 88707 54715 Donate
ஜீவசமாதியின் தினசரி நிகழ்வுகள்
(தினம்தோறும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் கம்யூனிட்டியில் வெளியிடப்படுகிறது)

அன்னமளிப்பு

தினசரி காலை 7.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை

தினமும் குரு நாதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சோறு, சாம்பார், ரசம், மோர் என்ற முறையில் சைவ உணவு வழங்கப்படுகிறது

அன்னமளிப்பில் பங்கு கொள்ள

நன்கொடை அளிக்க வங்கி விபரம் கீழே உள்ளது

தாங்கள் குருவிற்காக அளிக்கும் ஒவ்வொரு பொருளும் பிரசாதமாக தினம் தோறும் பக்தர்களுக்கு வழங்கப்படும்

வியாழன் தோறும் வாசியோகப் பயிற்சி

வாசியோகப் பயிற்சி

வியாழன் தோறும் குருவின் ஜீவசமாதியில் பிராணயாமம், வாசியோகப்பயிற்சி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது

வெள்ளிகிழமை நவக்கரிமந்திரம்

திருமூலர் அருளிய நவக்கரி மந்திரம்

ஆரோக்கியம், பொருளாதாரத்தில் மேன்மையடைய ஜீவசமாதியில் நடைபெறும் நவக்கரி மந்திர ஜெபத்தில் பங்கு பெற்று வேண்டியன பெறலாம்

ஜீவசமாதியில் வருடம் தோறும் கொண்டாடப்படும் விழாக்கள்

நவராத்திரி விழா

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம்

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் நவாராத்திரி கொலு ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் மூன்று வேளை பூஜையும், மூன்று வேளையும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. விஜயதசமி அன்று சுமார் 5000 பக்தர்கள் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

குருபூஜை விழா

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம்

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் குருபூஜை விழா கடந்த 38 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவில் குறைந்த பட்சம் 20000 பக்தர்கள் கலந்து கொண்டு குருவருள் பெறுவர். அப்போது காலையில் சிற்றுண்டியும், மதியத்திலிருந்து மாலை வரை அறுசுவை அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்படுகிறது.

மார்கழி பிரசாதம்

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம்

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் விடிகாலை 5 மணி முதல் 7 மணி வரை முள்ளங்காடு கிராம மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து வழக்கம் போல அன்னதானமும் வழங்கப்படுகிறது.

கார்த்திகை தீப பெருவிழா

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம்

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் மாலையில் கார்த்திகை தீபமேற்றி விழா கொண்டாடப்படுகிறது. அது சமயம் சுமார் 10000 பக்தர்களுக்கும் மேல் தீபவிழாவில் கலந்து கொள்கின்றனர்.

39வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்


Responsive image
குருநாதர் பற்றிய வீடியோ செய்திகள்