வாசியோகம்
வாசியோகம் குருவின் வழிகாட்டுதலின் படி பயிலக்கூடியது. குருவன்றி வாசியோகம் பயிலக் கூடாது.
குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து,
மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டி ஜீவன் சமாதி நிலை எய்தச் செய்வதே வாசியோகம்.
மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றின் பாதையை, மேலே உள்ள மூல ஆதாரமாகிய
(ஆன்மீக பாதைக்கு மூலாதார சக்கரம் மேலே உள்ளது) பாதையில் செலுத்தி, ஜீவனை சமாதி நிலைக்கு அழைத்துச் செல்வது வாசியோகம்.
சித்தர்களின் கூற்றின்படி உண்மை நிலை ஆன்மீகம் கழுத்திற்கு கீழே இல்லை என்பது திண்ணம். ஆகையால் உடலுக்கு உள்ளும் வெளியுமாக வந்து
விரயமாகிக் கொண்டிருக்கும் காற்றை மேலும் கீழுமாக ஏற்றி இறக்குவதே சித்த வேதத்தின் கூற்றாகும். சித்த வேதத்தை அடிப்படியாகக் கொண்டு
சித்த வித்தை வழங்கப்படுகிறது.
தவத்திரு.ஜோதி சுவாமிகள் ஒவ்வொரு வியாழன் அன்றும், வாசியோகப் பயிற்சி செய்ய விரும்பும் பக்தர்களுக்கு முழுமையான
பயிற்சி வழங்கி வருகிறார். நல்லமுறையில் பயிற்சி செய்து பக்தர்கள் மேன்மையடைவதே சுவாமிகளுக்கு பக்தர்கள் செலுத்தும் கட்டணம் ஆகும்.